தென்கொரியாவில் இருந்து வடகொரியாவிற்கு பணத்தை கடத்தும் கும்பல்!
வடகொரியாவில் இருந்து வெளியேறி தென்கொரியாவில் தஞ்சமடைந்த வடகொரியர்கள் பலர் தங்களது குடும்பங்களுக்கு சட்டவிரோத முறையில் பணம் அனுப்பி வருகின்றனர்.
இதற்காக தரகர்கள் மூலம் பணத்தை பரிமாறி பின்னர் வடகொரியாவில், கொரியர்கள் (Courier) என்று அழைக்கப்படும் இடைத்தரகர்கள் வாயிலாக இந்த பணம் பயனாளிகளை சென்று சேர்கிறது.
தென்கொரியாவில் இருக்கும் உறவினரிடமிருந்து பணம் வேண்டுமெனில் வடகொரியர்கள் தரகர்களை அணுகுகிறார்கள்.
தரகர்கள் தங்களது சீன கைத்தொலைபேசி இலக்கங்கள் மூலம் அந்த உறவினரை தொடர்பு கொண்டு சீன வங்கிக்கணக்கிற்கு பணத்தை வைப்பிலிட செய்கின்றனர்.
அதன்பின்னர், சீனாவிலிருந்து பல்வேறு வழிகளில் பணம் வடகொரியா வந்தடைகிறது. அங்குள்ள சிலர் அந்த பணத்தை ரகசியமான முறையில் பயனாளிகளிடம் சேர்க்கின்றனர். இதில் ஒரு தொகையை தரகுப்பணமாகவும் பெற்றுக் கொள்கின்றனர்.
இந்த நடவடிக்கையைத் தடுக்க செய்ய வடகொரிய அரசாங்கம் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.