இரவை பகல் போல் மாற்றிய அதிகாலை பயணித்த விண்கல்!
போர்த்துக்கல் (Portugal) நாட்டில் இரவை பகல் போல் மாற்றிய பிரகாசமான விண்கல் (Meteor) ஒன்றின் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த விண்கல்லானது ஸ்பெயின் (Spain) மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்கு இடையே நேற்று (18) அதிகாலை 1.45 மணியளவில் தென்பட்டுள்ளது.
இந்த விண்கல் நீலநிறத்தில் பிரகாசித்ததால் இரவு வானம் நீல நிறத்தில் பிரகாசமாக மாறி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன், இந்த விண்கல் பூமியின் வளி மண்டலத்துக்குள் மணிக்கு 61,000 கிமீ வேகத்தில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, அந்த விண்கல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து கானோ பாரிஷ் மீது சுமார் 19 கிலோமீட்டர் உயரத்தில் சிதைந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது சாதாரணமாக பூமியில் விழும் விண்கற்களை விட பெரிதாக இருந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.