உக்ரைனின் நட்பு நாடு அயல் நாடுகளுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதில்லை என அறிவிப்பு!

உக்ரைனுக்கு மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான போலந்து அண்டை நாடுகளுக்கு இனி ஆயுதங்களை வழங்குவதில்லை என அறிவித்துள்ளது.

போலந்து பிரதமர் இதனை அறிவித்துள்ளதுடன் நவீன ஆயுதங்களுடன் தங்களை தற்காத்துக் கொள்வதிலேயே போலந்தின் கவனம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

போலந்து ஏற்கனவே உக்ரைனுக்கு 320 யுத்த தாங்கிகள் மற்றும் 14 மிக்-29 ரக போர் விமானங்கள் என்பவற்றை வழங்கியுள்ளது.

முன்னதாக போலந்து உக்ரைனின் தானியங்கள் மீதான தடையை நீட்டித்தது.

இந்தநிலையில் போலந்தின் புதிய அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.