வாக்னர் படையின் தலைவர் வேண்டுமென்றே கொல்லப்பட்டாரா? அவருடன் பயணித்த 10 பேர் யார்?

கடந்த வாரம் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் உள்ளிட்ட 10 பேருக்கு மரணத்தை ஏற்படுத்திய விமான விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

வாக்னர் படையின் தலைவர் வேண்டுமென்றே கொல்லப்பட்டாரா? அவருடன் பயணித்த 10 பேர் யார்?

அந்த விபத்து தொடர்பான விசாரணையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் அனைத்தும் வெளிப்படையாக இடம்பெறுவதாகவும், அதன்படி, இந்த விபத்து வேண்டுமென்றே நடத்தப்பட்டுள்ளதென கூறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் இருப்பதை ரஷ்யாவின் விசாரணைக் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

நாட்டின் உயரிய விருதைப் பெற்றதாகக் கூறப்படும் யெவ்ஜெனி பிரிகோஸின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

எனினும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாதிருக்க முன்னதாக தீர்மானித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.