வாக்னர் குழு ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது!
ரஷ்யா இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் அந்த நாட்டில் செயற்படும் வாக்னர் ஆயுதக்குழு, இராணுவத் தலைமையைக் கவிழ்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார் என அறிவித்துள்ளது.
ரஷ்யா இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் அந்த நாட்டில் செயற்படும் வாக்னர் ஆயுதக்குழு, இராணுவத் தலைமையைக் கவிழ்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார் என அறிவித்துள்ளது.
வழியில் குறுக்கிடும் அனைத்தையும் தங்களது படை அழிக்கும் என வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஸின் (லுநஎபநலெ Pசபைழணாin) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இயங்கும் வாக்னர் என்ற ஆயுதக்குழுவும், யுக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து செயற்படுகிறது.
யுக்ரைன் படையினர் இந்த இரண்டு தரப்பினரையும் எதிர்த்து போராடுகின்றனர்.
இந்த நிலையில், வாக்னர் குழு, ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
வாக்னர் படையினர் முக்கிய பகுதிகளை நோக்கிச் செல்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக, தலைநகர் மொஸ்கோவின் முக்கிய பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.