இரசாயன தொட்டியில் வீழ்ந்த பூனை - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை!

இரசாயன தொட்டியில் வீழ்ந்த பூனை - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை!

ஜப்பானின் மேற்கு நகரமான ஃபுகுயாமாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இரசாயனங்கள் அடங்கிய தொட்டியில் பூனை ஒன்று விழுந்ததை அடுத்து செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு அங்குள்ள மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பூனை அங்கிருந்து தப்பி சென்றுள்ளமை சிசிரிவி காணொளி காட்சிகளில் இருந்து தெரியவந்துள்ளன.

ஹெக்ஸாவலன்ட் குரோமியம் (hexavalent chromium) என்ற இரசாயனம் அடங்கிய தொட்டியில் குறித்த பூனை வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரசாயனத்தின் ஊடாக புற்று நோய் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பூனைகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகியிருக்குமாறு ஃபுகுயாமா நகர மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் குறித்த பூனையை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிலர் குறித்த பூனை உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.