எதிர்வரும் மாதத்தில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் - முன்கூட்டிய எச்சரிக்கை!
எதிர்வரும் மாதத்தில் முதல் வாரத்தில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
எதிர்வரும் மாதத்தில் முதல் வாரத்தில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 12 மணித்தியாலங்களில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணம், பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரத்தினபுரி மாவட்டத்தில் 101 மில்லிமீற்றருக்கு அதிகமான அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் வட்டவளை பிரதேசத்திலும் 87 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்தும் வறண்ட காலநிலை நிலவுகின்றது.
இதன் காரணமாக 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.