நாமல் ராஜபக்ச மற்றும் லொஹான் ரத்வத்தைக்கு இடையில் அடிதடி!
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் அதே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தை ஆகியிருகளுக்கிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இந்த வாக்குவாதம் எல்லை மீறியதால் இருவருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் மகிந்த ராஜபக்சவின் மனைவி இருவருக்கு இடையே சமரசம் செய்தமையால் வாக்கு வாதம் கைகலப்புக்கு செல்லாது தடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டிற்கு சென்றிருந்த லொஹான் ரத்வத்தை ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு நாமலிடம் வேண்டுகோள் விடுத்த போது இருவரிடையே கடும் சொற்போர் இடம்பெற்றுள்ளது.