அமெரிக்க ரிச்சர்ட் வர்மாவுக்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் இடையே சந்திப்பு!
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மாவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமது இலங்கை விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் உள்ளிட்ட இடங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை விஜயத்திற்கு முன்னதாக அவர், இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் உள்ள தங்களது நட்பு நாடுகளுடனான உறவை அவரது விஜயம் வலுப்படுத்துவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.