தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுப்பு

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுப்பு

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக, மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் அப்பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பௌர்ணமி தினத்தன்று மாலை நிறைவடைகின்றது.

அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.