புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் புதிய திருத்தம் வர்த்தமானியில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல திருத்தத்துக்கு அமைச்சரவை  அனுமதி!
Cabinet

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் புதிய திருத்தம் வர்த்தமானியில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

திருத்தப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டதன் பின்னர், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிக்கும் நோக்கில், அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஒரு வருடத்துக்கு முன்னர் அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் அளித்தது.

எவ்வாறாயினும், அதன் சில சரத்துக்கள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால், பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின்படி திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வரையப்பட்டுள்ளது.