வவுனியா - கொழும்பு தனியார் பேருந்து மோதி ஒருவர் பலி!
புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பியடி பகுதியில் இன்று பிற்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் கருவலகஸ்வெவ 8ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் சிக்கிய மற்றுமொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.