பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 12.57 மணியளவில் பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.