விஜய்யின் 69வது படம் தெலுங்கு சார்ந்ததா - இயக்குனர் விபரம் வௌியானது?

விஜய்யின் 69வது படம் தெலுங்கு சார்ந்ததா - இயக்குனர் விபரம் வௌியானது?

அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் "கோட்"  என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். 

குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, நெறிப்படுத்தல் பணிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார். 

தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் சூட்டியுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பில், தற்போது நடித்து வரும் கோட் படம் தவிர்த்து, மற்றொரு திரைப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஏற்கனவே நடிகர் விஜய் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார். 

அதேவேளை, திரைப்படத்தின் பணிகளில் அரசியல் கட்சி பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருந்தார். 

எனினும், இந்த படத்தின் இயக்குனர் குறித்து எவ்வித தகவலும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

இதன் காரணமாக விஜய் நடிக்கும் 69 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என தகவல்கள் கசிந்திருந்தன.

அத்தோடு, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை இயக்கிய வினோத், விஜய்யின் 69ஆவது படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படம் அரசியல் கதைக்களம் கொண்டு உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதைத் தொடர்ந்து விஜய்யின் 69ஆவது படத்தை வெற்றி மாறன் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், விஜய் 69 படத்தின் இயக்குனர்கள் பட்டியலில் புதிய பெயர் இணைந்துள்ளது. 

அதன்படி தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் என முன்னணி நடிகர்களை இயக்கிய த்ரிவிக்ரம், விஜய்யின் 69ஆவது படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும், இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.