கிரிக்கெட் கதையொன்றை இயக்கத் தயாராகும் கௌதம் வாசுதேவ் மேனன்!
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீப காலமாக முக்கியமான திரைப்படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராகவும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
அவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான, ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தநிலையில், உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதியில் மோதிய இந்திய, நியூசிலாந்து ஆட்டத்தின் போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கேட்ட கேள்வி ஒன்றிற்கு, அடுத்ததாக கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளதாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
இது, இரண்டு கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட அளவிலிருந்து மாநில அளவில் கிரிக்கெட் விளையாட செல்லும் கதையாக உருவாக உள்ளதாகக் கூறியிருக்கிறார்.