லோகேஷ் யுனிவெர்ஸ்ஸில் இணைய போகும் ரஜினிகாந்த்!
ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஜெயிலர்' திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் 171ஆவது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.