பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கப்போகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கப்போகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

சின்னத்திரையில் வெற்றிகரமாக 7 சீசன்களை கடந்துள்ள பிக் பாஸ். உலகநாயகன் கமல் ஹாசன் இதுவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் 8வது சீசனை தொகுத்து வழங்கவுள்ளார்.

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருக்கிறது. விஜய் சேதுபதி கண்டிப்பாக கமல் ஹாசனை போல் அனைவரையும் சுவாரஸ்யமான வகையில் கவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்து பல விதமான செய்திகள் சமூக வலைத்தளத்தில் உலாவி வருகிறது. இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் நடிகை அக்ஷிதா அசோக் என்பவர் பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ளாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கும் அக்ஷிதா அசோக் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ளார். இதை தொடர்ந்து வெளிவந்துள்ள இந்த செய்தியின்படி பிக் பாஸ் 8ல் கலந்துகொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஷாலினி சோயா, ரோஷினி ஹரிப்ரியன், சம்யுக்தா, திவ்யா துரைசாமி ஆகியோரும் பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ளப் போகிறார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால், இவை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.