மகிந்த ராஜபக்சவுக்கு தொடரும் கொலை அச்சுறுத்தல்!

2009இல் யுத்தத்தை வெற்றிகொண்டதன் காரணமாக , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொலை அச்சுறுத்தல் இன்னமும் இருப்பதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரப் பேரணி ஒன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் குட்டியாராச்சி, இறுதி போரை இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவருக்கான அச்சுறுத்தல் முற்றாக முடிவடையவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் ராஜபக்சவின் பாதுகாப்பை திரும்பப் பெறுவது அல்லது தேர்தலுக்குப் பின்னர் அவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகள், அவரை படுகொலை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் என்று குட்டியாராச்சி எச்சரித்துள்ளார்.
2022 அரகலய என்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது பிரதமர் அலுவலகம் மீதான தாக்குதலின் போது ராஜபக்சவைக் கொல்லும் திட்டம் இருந்ததாகக் கூறிய அவர், திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் காரணமாகவே, ராஜபக்ச உயிர் தப்பியதாகவும் கூறியுள்ளார்.