கொட்டும் மழையிலும் உயர்தர பரீட்சைக்கு ஆர்வத்துடன் ​தோற்றிய மாணவர்கள்!

கொட்டும் மழையிலும் உயர்தர பரீட்சைக்கு ஆர்வத்துடன் ​தோற்றிய மாணவர்கள்!

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2312 நிலையங்களில் நேற்று ஆரம்பமாகிய நிலையில்,  இம்முறை பரீட்சைக்கு நாடாளவிய ரீதியில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 185 பேர் பரீட்;சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.

பரீட்சை எதிர்வரும் 20 திகதி வரை நடைபெறும் எனவும் இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்திலும், வடக்கு கிழக்கு பிராந்தியங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

கொட்டும் மழையையும் பொறுப்படுத்தாது மலையகப்பகுதியில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றுவதனை இன்றும் காணக்கூடியதாக இருந்தது.

சகல பரீட்சை நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான குறிப்பிடத்தக்க போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

எனினும், வௌ்ளப்பெருக்கு மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்து வந்து பரீட்சை மண்டபத்திற்குள் விட்டு  பாரிய எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தமையும் காணக்கூடியதாக இருந்தது.