அருகம்பே பகுதிக்கு விசேட அதிரடிப் படை விரைவு!

அருகம்பே பகுதிக்கு  விசேட அதிரடிப் படை விரைவு!

அருகம்பே சுற்றுலா வலயத்தின் பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அடங்கிய பாதுகாப்பு பிரிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரக் காரியாலயத்தில் இருந்து விடுக்கப்பட்ட விசேட தாக்குதல் அச்சுறுத்தல் ஒன்று பற்றி வழங்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அருகம்பே பிரதேசத்தில் அதிகமான இஸ்ரேலிய உல்லாச பயணிகள் வந்து செல்வதால் அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் முயற்சிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

அத்துடன் அப்பிரதேசத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்களை சோதனையிடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.