காற்று சுழற்சி குமரிக்கடல் பிராந்தியத்தில் செயலிழந்து லட்சத்தீவு அருகே ஒடுங்கியது!

இலங்கையின் தெற்காக நிலைகொண்டிருந்த காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக்கடல் பிராந்தியத்தில் ஒடுங்கி செயலிழந்து லட்சத்தீவு அருகே நீடித்துக் கொண்டிருக்கின்றது.

இது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து உள்ளதன் காரணத்தினால் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை மழை சற்று குறைவாகவே பெய்யும்.

அதேவேளை, மீண்டும் ஒரு காற்று சுழற்சியானது தற்போது அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது. 

இதன் தாக்கத்தினால் எதிர்வரும் 23ஆம் திகதிக்குப் பின்னர் மழை மீண்டும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேபோல் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு நிகழ்வும் தைப்பொங்கல் தினத்திற்கு முன்னதாக ஒரு நிகழ்வும் அதன் பின்னராக ஒரு நிகழ்வும் தொடர்ச்சியாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.