15 லட்சம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் கிரமமாக ஆரம்பம்!
20 லட்சம் அஸ்வெசும பயனாளிகளில், அடையாளம் காணப்பட்ட 15 லட்சம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் கிரமமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
20 லட்சம் அஸ்வெசும பயனாளிகளில், அடையாளம் காணப்பட்ட 15 லட்சம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் கிரமமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முதல் கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 4.395 பில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அஸ்வெசும தொடர்பான அனைத்து விசாரணைகளையும் 1924 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என நிதி ராஜாங்க அமைச்சர ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.