அதிகாலையில் பிடிபட்ட அர்ச்சுனா எம்.பி.- பொலிஸாரின் முட்டாள்தனமான செயல்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுக்கும் இடையில் இன்று அதிகாலை நடந்த கருத்து மோதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
குறித்த சம்பவம் அனுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய (21) சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது சொந்த வாகனத்தில் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.
இதன்போது, விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரினர்.
"நான் நாடாளுமன்றத்திற்குப் போகிறேன்." என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த பின்னரும் பொலிஸ் அதிகாரிகள் அவருடைய ஆவணங்களை தொடர்ச்சியாக கோரியதுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.