யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
உலக வங்கியினால் வெளிப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி , வருமானமின்மை , தொழிலின்மை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவை இதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.