வலையில் சிக்கிய 11 டொல்பின்கள் மீண்டும் கடலில் விடப்பட்டன

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று (05) கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் மீண்டும் கடலில் விடப்பட்டன.
கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் வெள்ளிக்கிழமை காலை க 11 டொல்பின்கள் அகப்பட்டன.
குறித்த டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த மீனவர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக விட்டனர்.
டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த மீனவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.