பல்கலைக்கழக மேன்முறையீடுகளுக்கு கால அவகாசம்!
2022 - 2023 வரையான பல்கலைக்கழக கல்வியாண்டு குறித்த மேன்முறையீடுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவுகள் அடுத்துவரும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகவுள்ளது.
பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், வழங்கிய தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலம் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2022-2023 ஆம் பல்கலைக்கழக கல்வியாண்டுக்கான மாணவர்கள் அடுத்த மாதம் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அதன்படி, முதற்கட்டமாக 42 ஆயிரத்து 145 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.