மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாத கால தடை!

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர், நாடாளுமன்றத்துக்குள் ஒரு மாத காலத்துக்கு பிரவேசிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனை 56 மேலதிக வாக்குகளால் இன்று (02) நிறைவேற்றப்பட்டது.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாத கால தடை!

நாடாளுமன்ற செயற்பாடுகள் ஆரம்பமான போது, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதன்போது, கருத்து தெரிவித்ததை அடுத்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

அந்த யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது பெரும்பாலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த யோசனைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாத்திரம் இந்த யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளார்.

அதேவேளை, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர், வரவு செலவுத் திட்ட வாசிப்புகளை அடுத்து வாக்களிப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்க முடியும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த மூவருக்கும், நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு ஒரு மாதகால தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 13ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்ட 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக அவர்கள் மூவரும் நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்க முடியும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.