காசா  சிறார்கள் வாழ்வதற்கு மிக ஆபத்தான இடம் - ஐ.நா அறிவிப்பு!

 காசா கரையோரம் சிறுவர்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்துள்ளது.

காசா  சிறார்கள் வாழ்வதற்கு மிக ஆபத்தான இடம் - ஐ.நா அறிவிப்பு!

காசாவில் மீண்டும் மோதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

போர் இடைநிறுத்தத்துக்கு முன்னர் காணப்பட்ட நிலைமை மீண்டும் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக காசாவில், மீண்டும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், காசாவில் பணயக்கைதிகளாக காணப்பட்ட 30க்கும் அதிகமான சிறுவர்கள் பாதுகாப்பான முறையில் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுவர்களின் பாதுகாப்பு நிமித்தம் போர்நிறுத்தம் மீண்டும் நீடிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் குறிப்பிட்டுள்ளது.