நண்பர்களை பாதுகாத்து மக்களின் மீது வரியைச் சுமத்தி வருகின்றனர்-சஜித் பிரேமதாச!
குறிப்பிட்ட ஒரு செல்வந்த வர்க்கத்தினை பாதுகாக்கின்ற பொருளாதாரம் முறை ஒன்றே தற்போது நாட்டில் காணப்படுகின்றது. IMF ஒப்பந்தம் மூலமும் தொழிலாளர் வர்க்கத்தின் ETF, EPF பணங்களை கொள்ளையடித்து முதல் தர பணக்காரர்களை பாதுகாத்து வரும் ஆட்சியே நாட்டில் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இருந்தால் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களே முதலில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். நாட்டின் தலைவரே அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
மக்களின் மீது வரிச் சுமையை சுமத்திக் கொண்டு செல்கின்றார். IMF குறிப்பிட்டதால்தான் அப்படி செய்கிறோம் என்பதை பதிலாக ஜனாதிபதி குறிப்பிட்டாலும் அது மக்களை ஏமாற்றுகின்ற கருத்தாகும். IMF ஒப்பந்தத்தில் அவ்வாறான ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை. அரசாங்கம் மக்களை அசௌகரியத்திற்குட்படுத்த முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்தாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (19) காலை நாவலப்பிடி பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு சீரழிந்து இருக்கின்ற சந்தர்ப்பத்தில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பங்காளர்கள் பொருளாதார செயற்பாடுகளை தமது நண்பர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். நாட்டின் விரிவான பொருளாதார வளர்ச்சி ஒன்றை உருவாக்கி அதன் பிரதி பலனை அனைத்து மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கக் கூடிய பொருளாதார யுகம் ஒன்றை கட்டியெழுப்புவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.
அநீதி, திருட்டு, ஊழல் மற்றும் மோசடி என்பன ஆட்சி செய்கின்ற இந்த காலத்தில் சாதாரண சமூகம் ஒன்றில் நீதி நியாயம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் பொதுவான பொருளாதாரப் பிரதிபலனை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆட்சி யுகம் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதுள்ள பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழைகளாக மாறியிருக்கிறார்கள். அந்த ஏழ்மையை போக்குவதற்காக ஜனசவிய திட்டத்தை விட வலு உள்ள திட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி நடைமுறைப்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
பதிலுக்காக வந்த ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் கண்ணை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். புரளிகளையும் மோசடியையும் கொண்டு மக்கள் மீது சுமையை அதிகரிக்கின்ற ஒரு யுகத்தை உருவாக்கி இருக்கிறது. சுகாதாரத் துறையில் ஊழல் மோசடி செய்து இலஞ்சத்தையும் தரகு பணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி 220 இலட்சம் மக்களுக்காக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வந்த போது இந்தப் பதில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் 113 பேரும் கெஹலியவை பாதுகாத்தனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அநீதி, திருட்டு, ஊழல் மற்றும் மோசடி என்பன ஆட்சி செய்கின்ற இந்த காலத்தில் சாதாரண சமூகம் ஒன்றில் நீதி நியாயம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் பொதுவான பொருளாதாரப் பிரதிபலனை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆட்சி யுகம் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதுள்ள பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழைகளாக மாறியிருக்கிறார்கள். அந்த ஏழ்மையை போக்குவதற்காக ஜனசவிய திட்டத்தை விட வலு உள்ள திட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி நடைமுறைப்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
பதிலுக்காக வந்த ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் கண்ணை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். புரளிகளையும் மோசடியையும் கொண்டு மக்கள் மீது சுமையை அதிகரிக்கின்ற ஒரு யுகத்தை உருவாக்கி இருக்கிறது.
சுகாதாரத் துறையில் ஊழல் மோசடி செய்து இலஞ்சத்தையும் தரகு பணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி 220 இலட்சம் மக்களுக்காக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வந்த போது இந்தப் பதில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் 113 பேரும் கெஹலியவை பாதுகாத்தனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களின் உரிமைக்காகவும் முன் நின்றோம்.
கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூக்கிப் பிடித்த போது அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வீதிக்கு இறங்கி போராடியது. இந்த நாட்டு மக்கள் இன, மத ரீதியில் பார்க்கப்படக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இயற்கை உர மோசடி, நனோ உர மோசடி, ஆகியவற்றுடன் தொடர்புடையவர் கண்டியில் இருக்கிறார்கள். இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இயற்கை உர மோசடி மாத்திரமில்லாமல் LRC காணிகளையும் அழுத்தங்களை பிரயோகித்து அவற்றைப் பெற்றுக் கொள்ள முயற்சித்து வந்தனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அனைத்து ஆய்வுகளின் படியும் நாம் முன்னிலையில் இருக்கிறோம்.
அனைத்து ஆய்வுகளின் படியும் செப்டம்பர் 21 ஆம் திகதி தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியடையும் என்பதோடு அதன் பின்னர் பொது மக்களின் யுகம் ஒன்றையும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
வலையொளி இணைப்பு-