அர்ச்சுனாவுக்கு எதிராக மீண்டுமோர் வழக்கு தாக்குதல்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் நேற்றையதினம் மேலுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் இவ்வாறாக அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
100 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.