சபை முதல்வரிடம் குட்டுவாங்கிய அர்ச்சுனா?

சபை முதல்வரிடம் குட்டுவாங்கிய அர்ச்சுனா?

நடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொள்ள வேண்டிய நகாரிகம், முதிர்ச்சி எதுவுமற்று. பொறுப்பற்ற விதத்தில் அர்ச்சுனா நடந்து கொள்வதால் யாழ்ப்பாண மக்களின்பிரச்சினைகளை நாடாளுமன்றத்துக்குள் எழுப்ப முடியாத இக்கட்டான நிலையும் எழுந்துள்ளது.

அர்ச்சுனாவின் சிறுபிள்ளைத்தனமான நடத்தை- பேச்சினால் அவரது உரையை யாரும் கணக்கெடுக்காத நிலைமையேற்பட்டுள்ள சூழலில்- நாடாளுமன்றத்திலும் அவரது நடத்தை காரணமாக முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்களின் பிரச்சினையை எழுப்புகிறேன் என்ற பெயரில் வைத்தியர் த.சத்தியமூர்த்தி மீதான தனிப்பட்ட குரோதத்தை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து, அவரது பேச்சு இடைநடுவில் நிறுத்தப்பட்டது.

சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க எழுந்து, நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டிய, எழுப்பப்படும் கேள்விகள் பற்றி அர்ச்சுனாவுக்கு புரியும்படி வாசித்தார். எனினும், அதையும் கேட்காமல், அர்ச்சுனா கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீதும், ஓ.எல் சித்தியடையாதவர் என பொய்யான விடயத்தை கூச்சலிட்டார்.

இதன்போது பிமல் ரத்னாயக்க தலையிட்டு கிண்ணியாவில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்ட மேடையில் இருந்து கீழே இறக்கப்பட்டதற்கு கணக்கு தீர்க்கிறீர்களா என கேட்டார்.

இதனால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது.

தனது குட்டு உடைந்ததால் அர்ச்சுனா சங்கடத்தில் நெளிந்தபடி உட்கார்ந்தார்.

இதன் காரணமாக எம்.பி, இராமநாதன் அர்ச்சுனாவின் உரை கன்சார்ட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.