41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலம் - கஜேந்திரக்குமார் எதிர்ப்பு!

41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலம் - கஜேந்திரக்குமார் எதிர்ப்பு!

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் 41 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 5 மணி வரை இடம்பெற்றதுடன், விவாதத்தை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் சட்டமூலத்துக்கு வாக்கெடுப்பை கோரியிருந்தார்.

இதற்கமைய இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 48 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் வழங்கப்பட்டன.

இதன்படி, சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குழுநிலை விவாத்தின் போது குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேசிய நீரளவை சட்டமூலமும் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.