தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் செய்தி -  இணையத்தள உரிமையாளருக்கு விளக்கமறியலில்!  

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் செய்தி -  இணையத்தள உரிமையாளருக்கு விளக்கமறியலில்!  

இராணுவத்தினரை அவமதிக்கும் வகையிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்திலும் செய்தி வெளியிட்ட இணையத்தள உரிமையாளர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
கணணி குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய கைதான சந்தேகநபர் நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
 
இதன்போது அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட பிணை கோரல் நீதவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.