எதிர்வரும் தேர்தலில் கூட்டணி!
எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, அதன் சிரேஷ்ட உப தவிசாளரான மகிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதானமாக கொண்டு கட்டியெழுப்பப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.