பதாதைகளை ஏந்தி சபரகமுவ பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு!

பதாதைகளை ஏந்தி சபரகமுவ பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு!

பல கோரிக்கைகளை முன்வைத்து சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பதாதைகளை காட்சிபடுத்தி தமது எதிர்ப்பினை இன்று முன்வைத்தனர்.

பல்கலைக்கழக உபவேந்தர் காரியாலயம், சுகாதார பிரிவு, உணவகம், மாணவர்கள் தங்கும் விடுதி, பம்பஹின்ன சந்தி, அதனை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு பதாகைகள் காட்சிபடுத்தப்பட்டன.

இந்த எதிர்ப்பு குறித்து சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் கிரிஸ்னக்க நெரஞ்ஜன் இவ்வாறு தெரிவித்தார்.

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் 9500 மாணவர்கள் தற்போது கல்வியை தொடர்கின்றனர்.

இருந்த போதும் 5000 மாணவர்களுக்கு மட்டுமே தங்கும் விடுதி வசதி உள்ளது.

பம்பஹின்ன பிரத​ேசத்திலோ அதனை அண்மித்த பகுதிகளிலோ மாணவர்கள் தங்குவதற்கான வசதிகள் இல்லை.

சுகாதார பிரிவில் உள்ள குறைப்பாடுகளை  நிவர்த்தி செய்து தருமாறும், புதிய தங்குமிட கட்டிடம் ஒன்று அமைத்து தரவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

எமக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.