தாழமுக்கமும் - வடகிழ் பருவப் பெயர்ச்சிக் காலமும் - எச்சரிக்கை!

தாழமுக்கமும் - வடகிழ் பருவப் பெயர்ச்சிக் காலமும் - எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக நிலவும் தாழமுக்க பகுதியானது தற்போது கல்முனையில் இருந்து கிட்டத்தட்ட 800km தூரத்திலும், திருகோணமலையிலிருந்து கிட்டத்தட்ட 900km தூரத்திலும் நாகப்பட்டினத்தில் இருந்து 1150km தூரத்திலும், சென்னையிலிருந்து 1300km தூரத்திலும் இலங்கையின் தென்கிழக்காக நகர்ந்து வருகிறது.

இதேவேளை, இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் இன்று (08) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான வானிலை முன்னறிவிப்பு:

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக உருவாகியுள்ள தாழமுக்க பகுதியானது, அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் இலங்கைக்கு அப்பால் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தை வந்தடையும்.

இதன் தாக்கத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை கொண்ட காலநிலை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, வடகிழக்கு பருவப் பெயர்ச்சி பருவகாலமானது மேற்குறிப்பிடப்பட்ட நிலையுடன் படிப்படியாக விரித்தியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.