வசந்த காலத்தில் ஜப்பான் போல் காட்சியளிக்கும் இலங்கை!

வசந்த காலத்தில் ஜப்பான் போல் காட்சியளிக்கும் இலங்கை!

இலங்கையில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஒரு தனித்துவமாக மலரும் ஸ்ரீலங்கன் சகுரா (Sri Lankan Sakura) என அழைக்கப்படும் பூக்கள் அதிக சுற்றுலா பயணிகளை கவர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பூவின் விஞ்ஞான பெயரானது தபேபுயா ரோசா (Tabebuia Rosea) என்பதாகும்.

ஒவ்வொரு ஆண்டின் இளவேனிற்காலத்தின் போது பூத்து உதிர ஆரம்பிக்கும் இந்த பூக்கள் பார்ப்போருக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அழகாக தெரிவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இலங்கையில் கொழும்பு, மத்திய மாகாணத்தின் ஒரு சில பகுதிகள் மற்றும் ஏனைய பல பகுதிகளிலும் இந்த பூக்கள் மலர்கின்றன. 

இந்த நிலையில், அவற்றை பார்வையிடவும் புகைப்படங்கள் எடுக்கவும் அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.