வீதியோரத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

அப்புத்தளை, பிடபொல பிரதேசத்தில் வீதியோரத்தில் இருந்து நேற்று (23) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய இதல்கஸ்ஹின்ன, போவத்த பகுதியைச் சேர்ந்தவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.