அனர்த்தங்கள் குறித்து பிராந்திய பொறியியலாளர்களுக்கு அறிவிக்கவும்!

அனர்த்தங்கள் குறித்து பிராந்திய பொறியியலாளர்களுக்கு அறிவிக்கவும்!

நிலவும் சீரற்ற காலநிலையினால் மண் மேடுகள் சரிந்து அல்லது மரங்கள் முறிந்து, ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டால், உடனடியாக பிராந்திய பொறியியலாளர்களுக்கு அறிவிக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் முழுமையான அதிகாரம் பிராந்திய பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், மேலும் தெரிவித்தார்.