48 தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

மாத்தறை - மிதிகம பகுதியில் T56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 48 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, குறித்த சந்தேக நபரிடமிருந்து 84S ஆயுதத்திற்குப் பயன்படுத்தப்படும் வெடிமருந்தும் கைப்பற்றப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.