அதிக புகையுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு எச்சரிக்கை!

அதிக புகையுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு எச்சரிக்கை!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புகையுடன் பயணித்த  93 வாகனங்கள் இந்த வருடத்தில் கருப்புப்பட்டியலில் இடப்பட்டுள்ளதாக வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த வாகனங்கள் கருப்புப் பட்டயலில் இடப்பட்டதாக அதன் பணிப்பாளர் தசன் கமகே தெரிவித்துள்ளார்.

சில வாகனங்கள் தீங்கு விளைவிக்கும் வகையில் புகையை வௌியேற்றினால் 070 3500 525 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகைப்படம் அல்லது வீடியோக்களை அனுப்புமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், பொது மக்களிடம் கோரியிருந்தது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி, அதிக புகையினை வெளியிடும் வாகனம் செல்கிறது என்றால் இடம், நேரம், திகதி மற்றும் வாகன எண் குறிப்பிடப்பட்டு புகைப்படம் அல்லது வீடியோக்களை அனுப்புமாறு கோரப்பட்டிருந்தது.

பின்னர் அந்த வாகன உரிமையாளர்களை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அழைத்து அறுவுறுத்தப்படும்.

அதனையும் பொருட்படுத்தாவிடின் கறுப்புப்பட்டியலில் இடப்படும்.

கடந்த ஆண்டு 1800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. பின்னர் அவற்றில் சுமார் 200 வாகனங்கள் கருப்புப் பட்டியலில் இடப்பட்டது

இந்த வருடத்தில் இதுவரை 517 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் அவற்றில் 93 வாகனங்கள் கருப்புப் பட்டியலில் இடப்பட்டது" என்றார்.