ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் பலதரப்பு சந்திப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் பலதரப்பு சந்திப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது!

இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதி அங்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் - சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உலங்கு வானூர்தி மூலம் வந்த ஜனாதிபதி, வாகன தொடரணியாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதியின் பங்கேற்புடன் யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் - பழைய பூங்காவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக போராட்டம் ஒன்றும் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

பழைய பூங்கா அருகில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.