ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் இன்றும் சுற்றிவளைப்பு!
பொலன்னறுவை ஹபரணை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த நான்கு மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு நான்கு முகாமையாளர்கள் மற்றும் 11 பெண்களும் கைதுசெய்யப்பட்டதாக பொலன்னறுவை குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்னனர்.
ஹிகுராக்கொட நீதிமன்றிலிருந்து தேடுதல் நடவடிக்கைக்கான உத்தரவுகளை பெற்றதன் பின்னர் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலன்னறுவை குற்றப்புலனாய்வு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.பண்டார தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் மொனராகலை, சிகிரியா, கம்பஹா, மஹியங்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
திம்புலாகல தலுகானை, ஹபரணை, களனி, மொனராகலை, பூனாளை, அனுராதபுரம் மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 19, 27, 33, 47, 33, 48 வயதுடைய பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த முகாமையாளர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு குறைந்த பணத்தை கொடுத்து அதிக பணம் சம்பாதித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இந்த மசாஜ் நிலையங்கள் நீண்டகாலமாக இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது.