புதிய காற்று சுழற்சி : சுமாத்திரா தீவிலிருந்து இலங்கை நோக்கி நகர்வு!

புதிய காற்று சுழற்சி : சுமாத்திரா தீவிலிருந்து இலங்கை நோக்கி நகர்வு!

புதிய காற்று சுழற்சியானது எதிர்வரும் 10ஆம் திகதியளவில் உருவாகலாம் என கடந்த 01ஆம் திகதி குறிப்பிட்டது போல் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.

புதிதாக உருவாகியுள்ள காற்று சுழற்சியானது இலங்கையின் தென்கிழக்கே சுமாத்திரா தீவில் இருந்து தற்போது மேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

இதன் காரணத்தினால் எதிர்வரும் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கையின் அனேகமான பகுதிகளிலும் மழைக்கு சாத்தியம் உள்ளது.

புதிதாக உருவாகி இருக்கின்ற காற்று சுழற்சி காரணமாக பெரும் காற்று நிலைமை மற்றும் மழை பெய்யும் என இன்றைய தினம் (09) இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.