மத்திய வங்கி வளாகத்தில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பிணை!

மத்திய வங்கி வளாகத்தில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேக நபர்களை தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மத்திய வங்கி வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. 

கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமைக்கு ஏற்ப குத்தகை மற்றும் வட்டி விகிதங்களை குறைப்பதில் மத்திய வங்கி தலையிடாமை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது, மத்திய வங்கி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.