வடக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்த யார் காரணம்?

அரசுகளின் தவறான கொள்கைகளாலேயே வடக்கு இளைஞர்களுக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

வடக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்த யார் காரணம்?

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,

வடக்கில் அன்று மோதல் உருவாக காரணம் என்ன? 1956 மற்றும் 70 காலப்பகுதிகளில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளே அதற்கு வழிவிட்டது. இன அடிப்படையில் வேலை வாய்ப்பு, கோட்டாமுறை என்பவற்றுக்கு எதிராகவே குரல் எழுப்பட்டது. ஆக அவர்களை ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளியது யார்?

அரசுகளின் தவறான கொள்ளைகளே பிரதான காரணம். தவறுகளை வைத்துக்கொண்டு பயங்கரவாத முத்திரை குத்துவதில் பயன் இல்லை .

உலக நாடுகளில் பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது. ஆனால் அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்க பயன்படுத்தப்படுவதில்லை. ஊடகவியலாளர்கள், கலைஞர்களை ஒடுக்க பயன்படுத்தப்படுவதில்லை.

கடந்த வருடமே இச்சட்டமூலம் கொண்டுவரப்படவிருந்தது. எனினும், மனித உரிமை கூட்டத்தொடரால் அது மீளப்பெறப்பட்டது. தற்போது மீள கொண்டுவரப்பட்டுள்ளது.” – என்றார்.