எட்கா உடன்படிக்கையை செய்ய அரசாங்கம் இணங்கியதா? நாளை முக்கிய அறிவிப்பு!

எட்கா உடன்படிக்கையை செய்ய அரசாங்கம் இணங்கியதா? நாளை முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் இரு நாடுகளும் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகள் மற்றும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ள உத்தேச திட்டங்கள் தொடர்பிலான விசேட அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை வெள்ளிக்கிழமை வெளியிட உள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவிலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதியின் இந்தியப் பயணம் தொடர்பில் எவ்வித அறிவிப்புகளையும் அரசாங்கம் வெளியிடவில்லை. எட்கா உடன்படிக்கையை செய்துகொள்ள அரசாங்கம் இணங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ,

ஜனாதிபதியின் இந்திய பயணம் மற்றும் அங்கு பேசப்பட்ட மற்றும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை விசேட அறிவிப்பொன்றை வெளிவிவகார அமைச்சில் விடுக்க உள்ளார் என பதில் அளித்தார்.