ரணிலுக்கும் பசிலுக்கும் இடையே இரகசிய சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மற்றுமொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இரண்டு தடவைகள் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக கடந்த 21ஆம் திகதியும் சந்திப்புபொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.