செனல் 04 ஆவணப்படம் தொடர்பில் பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்

ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலுடன் தம்மை தொடர்புபடுத்தி பிரித்தானியாவின் செனல் 04 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பில் முறைப்பாடு அளிக்க இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (06) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

செனல் 04 ஆவணப்படம் தொடர்பில் பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்
Pillaiyan appeared

ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலுடன் தம்மை தொடர்புபடுத்தி பிரித்தானியாவின் செனல் 04 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பில் முறைப்பாடு அளிக்க இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (06) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

அவரது ஊடகப் பொறுப்பாளராக இருந்த அசாத் மௌலானா செனல் 04 வலையமைப்பில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். 

பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் சிறைச்சாலையில் இருந்தபோது குறித்த தாக்குதல்தாரிகளுடன் தமக்கு தொடர்பை ஏற்படுத்தியதாக அசாத் மௌலானா சாட்சியமளித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த தாக்குதல்தாரிகளை தாக்குதல்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என தாம் தெரிவித்ததாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தகவல்கள் முற்றிலும் தவறு என்பதை சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன், அது தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காகவே இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் காவல்துறைமா அதிபருடன்  கலந்துரையாடியதன் பின்னர் முறைப்பாடு அளிக்குமாறு அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இதன்படி நாளைய தினம் (06) குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார். 

இதேவேளை, செனல் 4 ஒளிபரப்பிய ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான தகவல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச புலனாய்வு குழுவினால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

செனல் 4 வெளிப்படுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் முன்னைய விசாரணைகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம்.

அந்த விசாரணைகள் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய குழுவால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்வார் என தாம் நம்புவதாகவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.