கெஹலிய ரம்புக்வெல்ல மீது எதிர்க்கட்சியால் அவநம்பிக்கை பிரேரணை சமர்ப்பிப்பு
இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, தரமற்ற மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தது.

இதன்போது, கருத்துரைத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை தற்போது பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், மலையகத்தில் உள்ள சிறுவர்கள் கடும் போசாக்கு இன்மை பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதனால் அவர்களுக்கு பகல் உணவை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரிடம் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சுகாதார துறையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார், நாட்டு மக்களுக்கு அரச வைத்தியசாலைகள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.